உளமார' என்று சொல்லி பதவியேற்ற விஜய்!!
'உளமார' என்று சொல்லி பதவியேற்ற விஜய் 'உளமார' சென்னை: இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவோடு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட விஜய், ஆண்டவின் பெயரால் பதவியேற்றுக்கொண்டிருந்தார்.
இது விஜய்க்கு ஆதரவு கொடுத்த இடதுசாரிகளுக்கு அதிருப்தியளித்திருந்தது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்ட விஜய், உளமார என்று கூறி பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்மதச்சார்பின்மையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதால்தான் விஜய்க்கு ஆதரவளித்ததாக இடதுசாரிகள் சொன்னார்களே! முதல்நாளே இதற்கு எதிர்மறையாக ஆண்டவன் பெயரால் விஜய் பதவியேற்றுக்கொண்டதை இடதுசாரிகள் வரவேற்கிறார்களா? என்று திமுக கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தது. இந்த பின்னணியில் தான் இன்று விஜய் உளமார என்ற சொல்லி பதவியேற்றதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.


கருத்துகள்
கருத்துரையிடுக