குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம்  கெளடண்யா மகாநதி ஆற்றங்கரை ஒரம்  பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1 ம்  தேதி  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்

இந்நிலையில் இந்த ஆண்டு இன்று வைகாசி 1 கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது முன்னதாக  காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழா

நேற்று கெங்கையம்மன்  தேர் திருவிழாவை தொடர்ந்து இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது

முன்னதாக தரணம் பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 

குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் வரும் கெங்கையம்மன் சிரசை காண லட்சகணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்

மேலும் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் ராணிப்பேட்டை  திருப்பத்தூர்  உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து  1200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சிரசு திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்தில்  இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

மேலும் பக்தர்கள் வழி நெடுகிலும் ஆடு மற்றும் கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டும் வழி

 நெடுகிலும் சூரத் தேங்காய் உடைத்தும் 

தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்

மேலும் பக்தர்கள் புலி ஆட்டம் சிலம்பாட்டத்துடன் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்

மேலும் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவிற்காக வேலூருக்கு உள்ளூர் விடுமுறையை வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!