குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் உப்பு மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் மே 1 ம் தேதி தொடங்கி
நாளை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில் இன்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கெங்கையம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டது.
பின்னர் தேர் கெங்கையம்மன் கோவிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்றது
இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு தேர் மீது துவி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் கெங்கையம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் மேலும் நாளை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக