நிலவன் டிவி இன்றைய தலைப்பு செய்திகள்!!
த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி - விஜய்
📌தவெகவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 35% - முதலமைச்சர்
📌திமுகவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் வெறும் 24.19% - முதலமைச்சர்
📌திமுக கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளைப் பெற்றுதான் வென்றது - விஜய்
📌தி.மு.க.வை விட 52.97 லட்சம் வாக்குகளை அதிகம் பெற்ற தவெக - விஜய்
📌சட்டமன்றத்தில் திமுக சொத்தை வாதம் - முதலமைச்சர் விஜய்
📌மக்கள் அரசை புஷ்பா அரசு என்று திமுக ஏளனம் - முதலமைச்சர் விஜய்
📌நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய்
📌த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92% அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம் - முதலமைச்சர் விஜய்
📌தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது தான் உண்மை - விஜய்
📌தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19% மட்டுமே - விஜய்
📌கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10%க்கும் கீழ் குறைவு - விஜய்
📌தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் தவெக பெற்றுள்ளது - விஜய்
📌இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு - விஜய்
📌இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? - முதலமைச்சர் விஜய்
📌ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாக தவெக திருத்திக்கொள்ளும் - முதலமைச்சர் விஜய்
📌சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., தற்போது சட்டமன்றத்திலும் தொடர்கிறது - முதலமைச்சர் விஜய்
📌1999ல் பாஜகவுடன் கூட்டணி போட்டு, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை - விஜய்
📌மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது - விஜய்
📌தோல்வியால் கண்கள், காதுகள், வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர் - விஜய்
📌மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி - விஜய்
📌நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும் - விஜய்
📌ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை - விஜய்
📌டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம் -
📌இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது - விஜய்
📌ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான் - விஜய்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக