பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மற்றொரு சம்பவத்தால் அதிர்ச்சி!!

வீட்டில் விட்டுச் செல்கிறேன்...” என்று அழைத்து சென்ற டிரைவர் செய்த கொடூரம்!

ஓசூர் அருகே பணி முடிந்து வீட்டிற்கு சென்ற காவல் நிலைய பெண் ஊழியரை, டெம்போ டிராவலரில் ஏற்றி சென்று நடுவழியில் தாக்கி வன்கொடுமை செய்ததாக டிரைவர் மூர்த்தி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மூர்த்தி, பாகலூர் காவல் நிலையத்திற்கு வந்தபோது போலீசுக்கு பயந்து தானே கொண்டு வந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் குணமடைந்ததும் கைது செய்து விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

“இது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது...” – பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வாக்குமூலம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!