நத்தம் அருகே குட்டூரில் நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள குட்டூரில் மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மன் கடந்த புதன்கிழமை இரவு மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் தீவட்டி, வர்ணக்கு டை பரிவாரங்களுடன் கோயில் மந்தையை வந்தடைந்தது. பின்னர் அம்மன் கோயிலுக்குள் சென்றதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. வியாழன்கிழமை அம்மனுக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், கிடாய் வெட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர். அன்று மாலை அம்மன் அதிர்வேட்டு, தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சாய ஓடைப் பகுதியில் உள்ள பூஞ்சோலை எனும் இருப்பிடம் போய்ச் சேர்ந்தது. இதில் காட்டுவேலம்பட்டி, உலுப்பகுடி, புன்னப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். வெள்ளிக்கிழமை இரவு வல்லடியார், கன்னிமார், கருப்பு சுவாமிகள் புரவி எடுப்பு நிகழ்ச்சியையொட்டி சுவாமி சிலைகள் மந்தையை வந்தடைந்தது. அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை மேளதாளம் முழங்க அதிர் வேட்டு, வர்ணக்குடை , தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளக்குட்டு பகுதியில் உள்ள இருப்பிடம் போய்ச் சேரும். இதற்கான ஏற்பாடுகளை குட்டூர் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக