தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மூடப்படுவதை அதன் கோரிக்கைகள் தொடர்பாக அறிக்கை!!


தமிழ்நாடு அரசின் தற்போது புதிய முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற டாஸ்மாக் கடையில் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தங்கள் , கல்வி நிறுவனங்கள் அருகில் செயல்பட்டு வருகின்ற 717 டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை எங்களது சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம் .கடந்த 23 ஆண்டுகளாக 24,000 டாஸ்மாக் பணியாளர்கள் பட்டப் படிப்புகள் முடித்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடும் பணிச் சூழலில் சொல்லொணா அவமானங்களை தாங்கிக் கொண்டு குறைந்தபட்ச ஊதியம் ரூ .1000-ஐ தாண்டாமல் ஆட்சிகள் பல மாறிய போதும் காட்சிகள் மாறாமல் பணி நிரந்தரம் , காலை முறை ஊதியம் , ஓய்வூதியம் பணிவரன் முறை பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் கடுமையாக உழைத்து வரும் பணியாளர்களுக்கு நியாயமான கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை .

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. பழனி பாரதி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் வெளியிடும் அறிக்கையில் பொது மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை முழு மனதாக வரவேற்கிறோம் ஆனால் அதில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணியிழப்பு ஏற்படும் சூழ்நிலைகள் அவர்களுடைய குடும்ப வாழ்வாதாரம் கருதி அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்களில் மாற்றுப்பணி வழிக்கிட வேண்டும் . எனவும் மேலும் தமிழக முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினாலும் அதனை முழு மனதுடன் வரவேற்கிறோம் . ஆனால் 23 ஆண்டுகள் அரசிற்காக பணியாற்றிய டாஸ்மாக் பணியாளர்களை அரசுத்துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியாமத்திட வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் அவர்களையும் தமிழக அரசையும் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!