சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது தினசரி ஜெனகை மாரியம்மன் ஒவ்வொரு வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 12 மணி முதல் நடைபெற்று வருகிறது..
சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதல் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர் ..
குழந்தை முதல் முதியவர்கள் வரை அக்னிச்சட்டி பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
முக்கியமாக குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் இருந்த பக்தர்கள் பிறந்த குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி சோழவந்தானில் வைகை ஆற்றில் இருந்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை மாரியம்மனுக்கு செலுத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் நான்கு ரத வீதிகளில் உருண்டு கொடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார் 21 அடி நீளம் அழகு குத்தியும் 21 சட்டி அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர் ...
சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன அமைப்புகள் ஆகியோர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
முத்துக்குமரன் நகை மாளிகை மற்றும் வேல் அடகு கடை மற்றும் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் சார்பில் மார்க்கெட் ரோடு பகுதிகளில் பொதுமக்களுக்கு காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
நாளை சோழவந்தான் மந்தை களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது சுமார் 5000க்கும் மேற்பட்ட காப்பு கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.
வருகின்ற இரண்டாம் தேதி திரு தேரோட்டம் நிகழ்ச்சியும் 3ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபாஷினி பெருமாள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் ஜெனகை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது..
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளும் காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீயணைப்பு துறை சார்பில் ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் போக்குவரத்து துறையினர் போக்குவரத்தை ஒழுகுபடுத்தி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்..
சோழவந்தான் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் பகுதியில் அரசு பேருந்துகள் பொதுமக்களுக்கான சேவைகளை செய்து வருகிறது..
பொது மக்களின் வசதிக்காக போக்குவரத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
கோவில் முன்பு காவல்துறையினரும் தன்னார்வலர்களும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகளையும் பொதுமக்களுக்கு தேவையான அறிவிப்புகளையும் செய்து வருகின்றனர்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக