கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்!!

கோவை மாவட்டம்,கோவையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதற்காக நாளை கோவை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோவை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காந்திபுரத்திலிருந்து வடகோவை மேம்பாலம் அவிநாசிலிங்கம் கல்லூரி பாரதிபார்க் சாலை வழியாக ஜிசிடி சென்று லாலிரோடு வழியாக மருதமலை செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பொது மக்கள் வாகனங்களும் காந்திபுரம், வடகோவை மேம்பாலம், சிந்தாமணி சந்திப்பில் வலது புறம் திரும்பி கிழக்கு பெரியசாமி சாலை வழியாக தடாகம் ரோட்டை அடைந்து லாலி ரோடு ரவுண்டானா வழியாக மருதமலை செல்ல வேண்டும்,என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!