திட்டக்குடி அருகே டிப்பர் வண்டியில் திடீர் தீ விபத்து! வைக்கோல் ஏற்றிச் சென்ற வண்டி தீப்பற்றி எரிந்ததால் பெருமுளையில் பரபரப்பு!!
கடலூர் மாவட்டம், சிறுமுளை ஊராட்சியில் இருந்து செந்துறைக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் ,வண்டியில் திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் பகுதியில் இருந்து புகை எழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சில நொடிகளில் தீ வேகமாக பரவி, வண்டி முழுவதும் எரிய தொடங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக