முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலாளர்.லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ் அவர்களை பற்றி ஒரு பார்வை!!
மாண்புமிகு. ச. ஜோசப் விஜய் முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலாளர்.லட்சுமி பிரியா ஐஏஎஸ் அவர்களை பற்றி ஒரு பார்வை:
லட்சுமி பிரியா ஐஏஎஸ் அவர்கள் நேரடியாக UPSC மூலம் நேரடியாக தேர்வானவர் தமிழ்நாட்டில் நேர்மை நேர்மை ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி பிரியா அவர்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது அங்கன்வாடி ஆசிரியர்கள் 450 பேருக்கு நியமனம் வழங்கினார். யாருடைய பேச்சுக்கும் அடிபணியாமல் பணியிடங்களை நேர்மையான முறையில் ஏழை எளிய மக்களுக்கும்,விதவைப் பெண்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் . தகுதியான நபர்களுக்கு மட்டும். இந்த பணியினை வழங்கினார் ஆறு மாதங்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார் இந்த பணிகளை நேர்மையான முறையில் போட்டவுடன் ஏனைய அரசியல்வாதிகளால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் ஒரு நேர்மையாக மாவட்ட ஆட்சியர் வேலை பார்த்து வரை ஆறு மாதங்கள் கூட பணி செய்ய விடாமல் தடுத்தது அரசியல்வாதிகள் அந்த அளவிற்கு அரியலூர் மாவட்டத்தில் மக்களிடையே குறுகிய காலத்தில் நல்ல பெயர்களை வாங்கி இன்றளவும் மக்கள் மத்தியில் அந்த மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மாதிரியான லட்சுமி பிரியா மாதிரி ஆட்சியரே அரியலூர் மாவட்டத்தில் பார்த்ததே இல்லை என்று மக்கள் இன்றளவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இரண்டாவது:
லட்சுமி பிரியா ஐஏஎஸ் மாநகராட்சி ஆணையர் சேலம் இம்மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியபோது மாநகராட்சி தூய்மையானதாகவும், செயல்பாடுகளிலும், மாநிலத்தில் சிறந்த மாநகராட்சிக்கான விருதை. அப்போதைய முதல்வர் செல்வி. ஜெ ஜெயலலிதா அவர்கள் கையால் மாநிலத்தின் மாநகராட்சிக்கான முதல் பரிசு பெற்றார். லட்சுமி பிரியா ஐஏஎஸ்., இவர் வேலை பார்த்த ஒவ்வொரு துறையும் முத்திரை பதித்தவர் பல திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு கடைக்கோடி வரை கொண்டு சென்றார் லட்சுமி பிரியா ஐஏஎஸ் அவர்கள் இவர்கள் குடும்ப பின்னணி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து நேரடியாக ஐஏஎஸ் எக்ஸாம் எழுதி அகில இந்திய அளவில் ரேங்க் பெற்று தமிழ்நாட்டில் கேடர் ஒதுக்கப்பட்டது அந்த அளவிற்கு அறிவுத்திறமையும் நேர்மையும் ஏழை எளிய மக்களுக்காக பணியாற்ற மட்டுமே பதவிக்கு வந்துள்ளார் என்பது இவர் வேலை பார்த்த அனைத்து துறைகளிலும் மக்களுக்கு தெரியும் அனைத்து ஐஏஎஸ் அலுவலகங்களுக்கும் இவரை பற்றி நன்கு தெரியும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக