குடியாத்தத்தில் நடைபெற்ற கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழ்நாடு மின்சார வாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில்.கோட்ட. அளவிலான மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கண்காணிப்பு . செயற்பொறியாளர்.ஜைய்னுல்.ஆபூதீன்தலைமை தாங்கினார்.கோட்ட. பொறியாளர் பொறுப்பு சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கோபாலபுரம் பகுதியில் இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்
அடுக்குமாடி . வீடுகளில் ஒரே இணைப்பில் உள்ள மின் இணைப்புகளை மாற்றி தனித்தனியாக அமைக்க வேண்டும்
உள்ளிட்ட 6 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தியினார் இதில் குடியாத்தம் கோட்டத்தை சேர்ந்த உதவி செயற்பொறியாளர்கள்
உதவி பொறியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக