தமிழகத்தை ஆளும் தமிழக வெற்றி கழக தலைவர், முதல்வர் விஜயின் செயல் பாடுகள், வரவேற்க்க தக்கது கோவையில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் புஸ்பானந்தம் தமிழக முதல்வருக்கு கடிதம்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக நடிகர் விஜய், பொறுப்பேற்று தமிழகத்தில் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இவரது செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஐஜி தலைமையில் சிங்கபடை பெண்கள் அமைப்பை உருவாக்கி உள்ளார். இதற்க்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், தமிழகத்தில் 4829 மதுபானகடைகள் அமைந்துள்ளது. இதன் மூலமாக மாதம் தோறும் 4 கோடி வருமானம் அரசுக்கு வருவாய் வரும் நிலையில், ஆட்சி அமைத்த இரு நாட்களில் 700க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது வரவேற்க்க தக்கது.. குறிப்பாக தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவில் புழங்கிய நிலையில், தற்போது போதை பொருளை தடுக்க சிறப்பு படை அமைக்க உத்தரவிட்டுள்ளார் இந்த திட்டத்தால் தற்போது தமிழகம் நல்ல நிலைக்கு திரும்ப இத்தகைய திட்டங்கள் வழி வகை செய்யும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆட்சியை தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்து வருகின்றது இதே போல மேலும் செயல்பட தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக