ஜாதி மதம் எனக்கு இல்லை நடிகர். பார்த்திபன் விரக்தி!!
ஜாதி மதம் எனக்கு இல்லை நடிகர். பார்த்திபன் விரக்தி!
மனநலம் பாதிக்கப்பட்ட பார்த்திபன் பேசுறேன்; சாதி இல்லாத சான்றிதழ் பெற்றது குறித்து பார்த்திபன் விரக்தி . மனநிலை பாதிக்கப்பட்ட பார்த்திபனின் பணிவான வணக்கம், சாதி மதம் தேவையில்லை என்று சான்றிதழ் வாங்கி இருக்கிறேன் என்று பார்த்திபன் கூறியுள்ளார் .
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த உஸ்தாத் பகத்சிங் படத்தில் வில்லனாக நடித்திருந்த பார்த்திபன், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், பேசியபோது, நான் பார்த்திபன். ஒரு நாயுடு பையன் சென்னையில் பிறந்து வளர்ந்த காரணத்தால் எனக்குத் தெலுங்கு தெரியாது. தமிழ் தான் எனக்கு இயல்பாக வரும் மொழி. ஆனால் இனி நேரில் காணும்போது, அது இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நான் முழுமையாகத் தெலுங்கில் பேசுவேன் என்று கூறியிருந்தார். பார்த்திபனின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தமிழ்நாட்டில் சாதி இல்லை என்று சொல்லிவிட்டு எல்லை தாண்டி சாதி பெருமை பேசுகிறார் என்று பார்த்திபன் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த விமர்சனங்களுக்கு பார்த்திபன் தரப்பில் இருந்து பல விளக்கங்கள் அளிக்கப்பட்டபோதிலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அவர் சாதி இல்லை மதம் இல்லை (No Caste, No Religion) சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளதாக கூறியிருந்தார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.


கருத்துகள்
கருத்துரையிடுக