மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கலாமா ? முதல்வர் விஜய்யின் சிகை அலங்கார நிபுணருக்கு தனி விமானம்!!
சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள்:
சென்னை: பிரதமரை காண டெல்லிக்கு சென்ற முதல்வர் விஜய் அவரது முடி அலங்கார நிபுணர் (விக் ஸ்பெஷலிஸ்ட்) ஜெகதீஷ் அவஸ்தி என்பவரை தனி விமானத்தில் அழைத்து சென்றுள்ளது சமூகவலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
மேலும், மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கலாமா என கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
முதல்வராக யார் பொறுப்பேற்றாலும் அரசு மரபு படி குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்திப்பது என்பது மரபு அந்தவகையில் தமிழக முதல்வராக விஜய் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்ற பிறகு மே.27ம் தேதி இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு மேல் குறிப்பிட தலைவர்களை பார்க்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சென்றிருந்தார்.
அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் முதல்வர் விஜய்யின் முடி அலங்கார நிபுணர் (விக் ஸ்பெஷலிஸ்ட்) ஜெகதீஷ் அவஸ்தி என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த இந்த ஜெகதீஷ் அவஸ்தி சிகை அலங்கார படிப்பை முடித்து பல சலூன்களில் பணிபுரிந்த பின்னர், முன்னணி ஹார் ஸ்டைலிஸ்டுகளிடம் வேலைபார்த்த பின்னர் பாலிவுட்டில் துணை நடிகர் - நடிகைகளுக்கு மேக் அப் ஆர்ட்டிஸ்டாக இருந்து முன்னணி திரைப்பிரபலங்களின் நட்பை விரிவுப்படுத்திக்கொண்ட அவஸ்தி அவர்கள் மூலம் விஜய்க்கு அறிமுகாமாகி பின்னர் பிகில் படத்தில் அவருக்கு சிகை அலங்கார பணி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிகில் திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ , திரைக்கு வெளிவராத ஜனநாயகன் வரை முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது அவருடன் பயணித்துள்ளார். சினிமாவை தாண்டி விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் அவரது ஸ்டைலிஸ்ட்டாக அவஸ்தி பணியாற்றி வந்த நிலையில் அவர் முதல்வராக வந்தது அந்த பணிகளையே தொடர்ந்து செய்து வந்துள்ளார். தனது பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்டாக அவஸ்தியை நியமித்து கொண்ட முதல்வர் விஜய் தற்போது டெல்லிக்கு சென்ற நிலையில் அவரையும் தனி விமானத்தில் அழைத்து சென்றது சமூகவலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
முதல்வர் விஜய் டெல்லி சென்ற போது இலகு ரக சொகுசு தனி விமானத்தில் செல்ல வாடகையாக ரூ.7 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு செலவானதாக கூறப்படுகிறது. இது தவிர அந்த விமானத்தை பார்க் செய்ய ஒரு மணி நேரத்திற்கு 2.5 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் ரூ.60 முதல் 70 லட்சம் வரை செலவினகள் ஆகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் முதல்வர்கள் தனி விமானத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பயணம் மேற்கொண்ட நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த பயணத்தில் விக் ஸ்பெசலிஸ்ட், அவரது டிரைவராக இருந்த ராஜேந்திரன், பவுன்சர் என தனக்கு தேவையான வட்டார நபர்களை அழைத்து சென்றுள்ளார்.
இவ்வாறு முதல்வரின் முதல் பயணமே சர்ச்சைக்குள்ளாகி இருப்பது மட்டுமின்றி, மக்களின் பணம் இப்படி தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக