விஜய்க்கு ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஎம் மாநில செயலாளர். பெ. சண்முகம்!!

விஜய்க்கு ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது, "விஜய் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநில குழுவில் நாங்கள் ஆலோசித்தோம். 10ம் தேதிக்குள் பெரும்பான்மை இல்லையெனில், ஆளுநர் ஆட்சி அமலாக்கப்படும். பெரிய கட்சி என்பதன் அடிப்படையில் ஆளுநர் விஜய்யை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அழைக்கவில்லை.தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்கவிடாமல் பாஜக முயற்சித்து வருகிறது. இதை தடுக்க, கொள்ளைப்புறம் வழியாக பாஜக நுழைவதை தடுக்க தவெக ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம் ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளோம். இன்னொரு தேர்தலை தவிர்க்கவும், ஆளுநர் ஆட்சியை தடுக்கவும் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!