நூலகமா? இல்லை சாதி அரசியலா?”ஆதிதிராவிடர் பத்திரிகையாளரை அறையில் பூட்டி மிரட்டியதாக பாமக நிர்வாகிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!

கடலூர் மாவட்டம்,அரசு நூலகம் ஆக்கிரமிப்பா? செய்தி சேகரிக்க சென்ற ஆதிதிராவிடர் நிருபருக்கு ஜாதி அவமதிப்பா?”

திட்டக்குடி அருகே சிறுமுளை ஊராட்சியில் பரபரப்பு குற்றச்சாட்டு — பாமக நிர்வாகிகள் மீது விரல் சுட்டும் பொதுமக்கள்.

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி அருகே சிறுமுளை ஊராட்சி:

அனைத்து சமூக மக்களும் கல்வி அறிவைப் பெற வேண்டும், புத்தகங்கள் மூலம் நாட்டின் நடப்புகளை அறிந்து முன்னேற வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் பல ஊராட்சிகளில் அரசு நூலகங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அதே நூலகங்கள் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டை இழந்து தனிப்பட்ட ஆதிக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளை ஊராட்சியில் செயல்பட்டு வந்த அரசு நூலகம், வடமாநிலத்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் கல்வி மற்றும் வாசிப்பு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அரசு சொத்து எவ்வாறு தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை நிருபர் ஒருவர், அவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டு தவறான ஜாதிப் பெயரை கூறி அவமரியாதை செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும், இந்த சம்பவத்தில் ஊராட்சியைச் சேர்ந்த சில பாமக நிர்வாகி நக்கீரன் அவர்களின் ஆதரவாளர்கள் தொடர்புடையதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “சமூக நீதி”, “மாற்று அரசியல்” என்று பேசும் தரப்பினரின் உண்மையான முகமிதுதானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசு சொத்தான நூலகம் எவ்வாறு தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது? ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரிடம் ஏன் ஜாதி அடிப்படையிலான அணுகுமுறை காட்டப்பட்டது? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய குறிப்புகள்:

அரசு நூலகம் யாரின் அனுமதியுடன் வாடகைக்கு விடப்பட்டது?

பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடம் ஏன் மூடப்பட்டது?

நிருபரிடம் ஜாதி பெயரில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

சமூக நீதி பேசும் அரசியல் தரப்புகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றன?

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!