தமிழக அரசு போக்குவரத்து கழகமா?அல்லது தமிழக வெற்றி கழகமா?பயணிகள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் குழப்பம்!!
தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்து முறையான அறிவிப்புகளை கூட தெளிவாக செய்ய முடியாத நிலையில், அரசு பேருந்துகளை அரசியல் கட்சியின் விளம்பர கருவியாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது.
திண்டுக்கல் மண்டல அரசு பேருந்து
TN57M2967
திண்டுக்கல் – எரியோடு – பாகனத்தம் – மலைப்பட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தின் ஊர் பெயர் டிஸ்ப்ளே போர்டில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி TVK என தமிழக வெற்றி கழகத்தின் பெயர் பிரதிபலிக்கச் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக