குடியாத்தத்தில் நடைபெற்ற கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருடன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி!!
குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமம் சார்பில் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் இன்னாள் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இ. தென்றல் குமார் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் மாணவரிடையே கலந்து உரையாடல் நடைபெற்றது.
இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரவியல் நிபுணர் டாக்டர் பெ சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி திரு தென்றல் குமார் அவர்களுக்கு மரியாதை செய்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் மேலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வழிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நேர்மையாகவும் முறையாகவும் அடைய முயற்சி செய்யும் படி கேட்டுக்கொண்டார் .
குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இ தென்றல் குமார் அவர்கள் மாணவர்கள் தங்களின் படிப்பை உறுதியாகவும் விருப்பத்துடன் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் எனவும் தாங்கள் தொழில் முனையோராகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு நான் மக்களுக்கு நேர்மையான வழியில் சேவை செய்வேன் என்று உறுதி அளித்தார் . மேலும் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி மற்றும் குழந்தைநல மருத்துவர் திருமதி ஹேமலதா ஆகியோர் முன்னிலை. வகித்தனர்
அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் மகேஷ் ராஜாமணி மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர் பால்ராஜ் சீனித்துரை மற்றும் அத்தி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தார்கள் . அத்தி கல்விக் குழுமத்தின் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினருடன் உரையாடினார்கள் . அத்தி கல்விக் குழுமத்தின் அனைத்து பேராசிரியர்களும், மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர் . அத்தி கல்விக்குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ . சுகநாதன் அவர்கள் விழாவினை ஒருங்கிணைத்தார்.
குடியாத்தம் செய்தியாளர் கேவி ஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக