தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொருளாளர். பெ.திலகர்!!

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொருளாளர் பெ.திலகர்  அவர்களின் வாழ்த்து செய்தி:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் அதில் இணைப்பு உள்ள இணைப்புச் சங்கங்கள் ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களுக்கு இரண்டு சதவீதம் அகவிலைப்படி 1.1. 2026 முதல் வழங்கப்பட வேண்டியது நிலுவையில் உள்ளது என்றும் தேர்தல் காரணங்களால் அகவிலைப்படி உயர்வு தள்ளிப்போனது என்பதை சுட்டிக்காட்டி அதை உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 11.5.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் வெ.மகேந்திர குமார் அவர்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது .

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலனை செய்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு  அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முதல் அறிவிப்பாக 1.1.2026 முதல் விடுபாடுகள் ஏதுமின்றி  58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக இரண்டு சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அதில் உள்ள இணைப்புச் சங்கங்கள் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை, மருத்துவ துறை, வேளாண்மை துறை, பதிவுத்துறை, நில அளவைத்துறை, புள்ளியல் துறை, குடிநீர் பாசனத்துறை, வனத்துறை, பொது சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலத்துறை, கால்நடைத்துறை, தனிக்கத்துறை மற்றும் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாகவும் நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெ. திலகர் மாநில பொருளாளர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சென்னை

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!