மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி!!
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தூத்துக்குடி மாவட்டத் தலைவர். சீ.ஜூலியஸ் அந்தோணி கூறியதாவது :
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் அதில் இணைப்பு உள்ள இணைப்புச் சங்கங்கள் ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களுக்கு இரண்டு சதவீதம் அகவிலைப்படி 01.01. 2026 முதல் வழங்கப்பட வேண்டியது நிலுவையில் உள்ளது என்றும் தேர்தல் காரணங்களால் அகவிலைப்படி உயர்வு தள்ளிப்போனது என்பதை சுட்டிக்காட்டி அதை உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 11.05.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் வெ.மகேந்திரகுமார் கோரிக்கை கடிதம் கொடுத்திருந்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அக்கடிதத்தை கனிவுடன் பரிசீலனை செய்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முதல் அறிவிப்பாக 01.01.2026 முதல் விடுபாடுகள் ஏதுமின்றி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக இரண்டு சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய விழுப்புரம் மாவட்ட மையத்தின் சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சீ.ஜூலியஸ் அந்தோணி.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்,
தூத்துக்குடி மாவட்டம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக