நள்ளிரவு பரபரப்பு!...
அமமுக சட்டமன்ற உறுப்பினர். காமராஜ், ஆளுநரை சந்திக்க லோக் பவன் சென்றார்.
டிடிவி தினகரன், அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் புகார் அளித்த நிலையில் லோக் பவன் சென்றார்.
காணாமல் போனதாக கூறப்பட்ட அமமுக எம்எல்ஏ காமராஜூடன் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு.
ஆளுநர் மாளிகை செயலாளர் இடம் இருந்து அழைப்பு வந்தது உடனே இங்கு வந்துவிட்டேன்.
நான் தவெகவிற்கு ஆதரவு என்றால் நானே வந்து இருப்பேன்.
தவெகவிடம் தான் பெரும்பான்மை இல்லையே அவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும்.
எனக்கு தவெகவிற்கு செல்ல வேண்டும் என எந்த விருப்பமும் கிடையாது.
காணாமல் போனதாக கூறப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்து பேட்டி!
வாகனத்தில் வந்துகொண்டு இருந்ததால் டிடிவி தினகரனின் தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை - காணாமல் போனதாக டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் விளக்கம்.
எம்எல்ஏ காமராஜ் எங்கிருந்தார் ? டிடிவி தினகரன் விளக்கம்:
மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ், புதுச்சேரியில் விடுதியில் இருந்துள்ளார்.
போலியாக அவரது பெயரில் வந்த கடிதம் வந்துள்ளதை பார்த்து பயந்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.
அவர் சென்னை வந்து என்னை பார்க்க வந்துள்ளார்.
யாரோ ஆளுநர் மாளிகைக்கு வாட்ஸ் அப் மூலம் கடித்ததை அவரது பெயரில் கொடுத்து உள்ளனர்.
ஆளுநர் அந்த போலியான பெயரில் வந்த கடிதத்தை படித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக