நத்தத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!
நத்தம் கைலாசநாதர் கோயிலில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி கோயிலில் தனி சன்னதியில் உள்ள கால பைரவருக்கு அபிஷேகம் பால், பழம்,இளநீர்,சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது முன்னதாகமூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். படவிளக்கம்: சர்வ அலங்காரத்தில் பக்தர்கள் காட்சியளித்த கால பைரவர் .
திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக