தேனி - க.புதுப்பட்டி அருகே உயிரை பறிக்க காத்திருக்கும் மின்கம்பவயர்கள் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம்!!
தேனி மாவட்டம், க.புதுப்பட்டி – அனுமந்தன்பட்டி இடையிலான பகுதியில் உள்ள பொதுக் கழிவறை அருகே மின்கம்பம் உடைந்து, மின் வயர்கள் சாலையில் ஆபத்தான நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் அந்த பகுதியை தினமும் விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தரையில் கிடக்கும் மின் வயர்களால் உயிர் அச்சத்தில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
“எப்போது மின்சாரம் பாயும் என்ற பயத்தில் தான் இந்த வழியாக செல்கிறோம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உயிர் சேதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த மின்கம்பத்தையும், சாலையில் கிடக்கும் மின் வயர்களையும் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக