கோவையில் நல்ல மதிப்பெண் எடுத்து பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வீட்டுமனையை கிரையம் செய்து கொடுத்து கல்விக்கு ஊக்கமளித்துள்ளார் கோவையை சேர்ந்த கண்ணன் என்ற சமூக ஆர்வலர்!!
கோவை மாவட்டம்,கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் தனது அறக்கட்டளையின் கீழ் மாவட்ட அளவில் , முதலிடம் பிடித்த மாணவ , மாணவியருக்கு
5 லட்சத்துக்கு மேல் , மதிப்பு கொண்ட இடத்தை கிரையம் செய்து கொடுத்திருந்த நிலையில் அதற்கான பத்திரத்தை இன்று அம்மாணவ மாணவிகளின் குடும்பத்தாரிடம் ஒபப்டைத்தார் . மேலும் கொரோனா காலத்தில் கல்வியை ஊக்கப்படுத்த பழங்குடி கிராம குழந்தைகளுக்கு டியூசன் எடுத்த பழங்குடி இளம்பெண்ணுக்கு திருமண நிதியுதவி வழங்கியதோடு , பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருட்களையும் வழங்கினார். கல்வியை ஊக்கப்ப்டுத்த மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இதுவரை வழங்கியுள்ளார் மேலும் இன்று இது குறித்து வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் தலைவர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கோவை மாவட்டம் கந்தை கவுண்டன் சாவடி அடுத்த சின்ன பொதிகையில் உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளியை தத்தெடுத்து அங்கு படிக்கும் மாணவர்கள் தேவையான புத்தகப் பைகள் நோட்டு புத்தகங்கள், பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றதாகவும் இன்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.




கருத்துகள்
கருத்துரையிடுக