ராணிப்பேட்டையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், கடந்த காலத்தில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பதை ரத்து செய்யக்கோரியும் நேற்று
ராணிப்பேட்டையில் RDO அலுவலகம் முன்பாக பாஜக அரசை கண்டித்து மாவட்ட நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோடீஸ்வரன், உத்தமன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர ஒன்றிய நிர்வாகிகள் மோகன்,முருகன், ராணி, வெங்கடேசன், கணேசன், மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக