நத்தம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை! பொதுமக்கள் மகிழ்ச்சி!!
திண்டுக்கல் மாவட்டம்,தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது.
நத்தம் பகுதியில் காலை முதலே கடும் வெயில் நிலவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், இதமான காற்று வீசத் தொடங்கியது. பின்னர் மிதமான மழையாகத் தொடங்கிய மழை, படிப்படியாக பலத்த மழையாக மாறியது.
மீனாட்சிபுரம், பேருந்து நிலையம், கோவில்பட்டி, சேர்வீடு பிரிவு, நத்தம் அவுட்டர், வத்திபட்டி, இடையபட்டி, மேலமேட்டுப்பட்டி, ந.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது.
காலை முழுவதும் வெப்பத்தால் அவதிப்பட்டிருந்த மக்களுக்கு, மாலை நேரத்தில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக