தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது இடம் ஏன்? விளக்கம்!!
இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கம் விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, 3வது பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இன்று நடக்கும் விழா ஆளுநர் நடத்தும் விழா. தமிழக அரசு விழா அல்ல.
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஒரு பிரதிநிதி.
மத்திய அரசு உத்தரவுப்படி தான் அவர் விழாவை நடத்த வேண்டும்.
வந்தே மாதரம் பாடலை முதல் பாடலாக பாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி வந்தே மாதரம் பாடப்பட்டது.எனவே இதில் தமிழக அரசை குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் இல்லை.
முதல்வர் விஜய் பதவி ஏற்பும் ஆளுநர் நடத்திய விழா தான். அதனால் அதிலும் வந்தே மாதரம் முதல் பாடலாக பாடப்பட்டது.
தமிழக அரசு நடத்தும் விழாவில் இவ்வாறு நடந்தால் அப்போது பார்க்கலாம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக