சற்றுமுன் கிடைத்த செய்தி!!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, இன்னும் போதிய பெரும்பான்மை இல்லை என்று கூறி ஆளுநர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
108 இடங்களை வென்ற டிவிகே-விற்கு காங்கிரஸ் கட்சி 5 இடங்களுடன் ஆதரவு அளித்தபோதும், மொத்த பலம் 113-ஆகவே உள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான 'மேஜிக் நம்பரான' 118 இடங்களை எட்ட இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்பதில் ஆளுநர் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால், வெறும் வாய்மொழி ஆதரவோ அல்லது யூகங்களோ செல்லாது என்றும், தெளிவான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவு கடிதத்துடன் வருமாறும் விஜய்யிடம் ஆளுநர் கறாராகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக