பலரும் அறியாத மதுரை தத்தனேரி சுடுகாட்டு காளி!!
மதுரை மாவட்டம்,நம்முடைய ஊர்களில் பல்வேறு இடங்களில் பல முக்கியமான காளி கோவில்கள் இருக்கிறது.
ஆனால் காசிக்கு அடுத்த இடமாகவும் பக்தர்களின் தீராத குறைகளை தீர்க்கும் அம்மாவாகவும் மதுரை தத்தனேரி சுடுகாட்டு காளி அம்மன் அருள் பாலித்து வருகிறார். மதுரை பல ஆன்மீக சிறப்புகளைக் கொண்டது.
மதுரையில் தத்தனேரி சுடுகாட்டில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன். பொதுவாக காளிக்கு குங்குமம் கலந்த குருதி அபிஷேகம் செய்வார்கள்.
ஆனால் தத்தனேரி சுடுகாட்டு காளியம்மனுக்கு உண்மையாகவே குருதியால் அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இங்கு உள்ள காளியம்மனிடம் நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் அதை அவளிடம் நம்பிக்கையாக சொல்லி வழிபாடு செய்ய நிச்சயம் நமக்கான தீர்வை அவள் கொடுக்கிறாள் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் இந்த #கோவிலில் அமாவாசை நாட்களில் மிகச்சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் காளியை #வழிபாடு செய்து விட்டு தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் ஒரு எலுமிச்சை பழம் வாங்கி வந்து அதை சூலத்தில் குத்தி வைத்து விடுகிறார்கள்.
இவ்வாறு செய்யும் பொழுது காளி அவர்களின் தங்களுடைய குடும்பத்தை எட்டு திசையிலும் இருந்து காப்பாற்றுகிறாள் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.
மேலும், சுடுகாட்டுக்கு அருகில் இந்த கோவில் அமைந்து இருந்தாலும் பக்தர்கள் பயம் இல்லாமல் இங்கு வந்து அம்மனை வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டுதல் வைத்து செல்கிறர்கள்.
அதாவது குழந்தைகள் முதல் பெண்கள் என பெரியவர்கள் வரை அனைவரும் மிக ஆவலுடன் இந்த அம்மனை பார்த்து தரிசித்து செல்வது இந்த அம்மனுடைய சக்தியை நம்மால் உணர முடிகிறது
தென்மண்டலசெய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக