தவெக ஆச்சரியக்குறிகளே! அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என தவெகவுக்கு அதிமுக ஐடி விங் பதில்!!

தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா? தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது!

தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி மற்றும் பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்! 

தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு.

கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க. உங்க கொள்கை என்ன, நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க. ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு. இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது. போங்க போங்க .. போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்.. என அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!