வரதட்சணை கேட்டு மிரட்டியதாக பொய் புகார் அளித்த இளம் பெண்! காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்பலம்!!

கோவை மாவட்டம், நாமக்கல்லை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் 23 வயதான ஸ்ரீநிதி. இவர் கடந்த மாதம் கோவை பந்தயசாலையில் உள்ள, மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம்  புகார் மனு ஒன்றை அளித்திருந்தார் அதில் நாமக்கல்லைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது, மகன் குர்ஷாந்த் என்பவருக்கும், தனக்கும், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம்  27-ந் தேதி திருமணம் நடைபெற்றது எனவும், திருமணத்தின் போது, எனது  பெற்றோர் தங்க நகை, மற்றும் பல லட்ச ரூபாய் ரொக்க பணம்  வழங்கினர். எனவும், திருமணம் ஆன சில நாட்களிலேயே மேலும் வரதட்சணை கேட்டு தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அதனைத் தொடர்ந்து கணவர் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் ஸ்ரீ நிதியின் கணவர் குர்ஷாந்த், அவரது தந்தை பொன்னுச்சாமி மற்றும் சகோதரர் நிஷாந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் குர்ஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்திய விசாரணையில், மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் இது குறித்த விரிவான அறிக்கையை நாமக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் வழங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீநிதி அளித்த புகாரில் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையே குர்ஷாந்த், பொன்னுச்சாமி, நிஷாந்த் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வரதட்சணை கேட்டு குர்ஷாந்த் உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!