சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைக்கு அருகில் உள்ள சிறிய மலைதான் திரிகூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை இங்கு நிறைய சித்தர் ஜீவ சமாதிகளும் பல்வேறு தெய்வங்களின் ஆலயங்களும் அடிவாரம் முதல் மலை உச்சி வரை பிரதிஷ்டை செய்யப்பட்டு சித்தர்களின் அருள் நிறைந்த மலையாக திகழ்ந்தது மலை அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது மாயாண்டி சுவாமிகள் அருளால் அவருடைய முயற்சியில் மலை முழுவதும் நிறைய ஆலயங்கள் நிறுவப்பட்டு ஆன்மீகப் பணிகளும் அரப்புணிகளும் பல நிகழ்த்திய மாயாண்டி சித்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்ப்போம் மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் உள்ள
கட்டிக்குளம் கிராமத்தில் குப்ப முத்து கூத்தாயி தம்பதிக்கு ஆண் மகனாக பிறந்த மாயாண்டி என்ற திருநாமம் பெற்ற இவர் சிறு வயதிலேயே மிகுந்த இறை பற்று மிக்கவராக இருந்தார் மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தில் இவருடைய தந்தை திருவேட்டை அய்யனாருக்கு பூஜை செய்யும் பூசாரியாக இருந்தார். ஒரு சமயம் மாயாண்டி சுவாமி சிறுவனாக இருந்த போது அவர் தந்தை அவரை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு பூஜைக்கு சென்றார் ஒரு இடத்தில் அவரை அமர வைத்து பூஜை செய்து கொண்டிருந்தார் அப்பொழுது பூஜை முடிந்ததும் வந்து பார்த்தபோது மாயாண்டி சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் அவர் தலையில் நாகம் படம் எடுத்தபடி அசையாமல் இருந்தது. அது உடலைச் சுற்றி இருந்தது. நாகம் தன் மகனை தீண்டி விடுமோ என்று அச்சத்தில் அய்யனாரை அழைத்து என் மகனை காப்பாற்றும்படி வேண்டி பின் திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பாம்பு அங்கு இல்லை மாயாண்டி சுவாமிகள் தியானம் கலைந்து விழித்து விட்டார் இதுபோல பல மகிமைகளை தன் சிறு வயதில் இருந்தே செய்தார் இளவயதில் இறை நம்பிக்கையும் அறப்பணியும் செய்து வந்தார் தன் பரம்பரை சொத்தான வைத்திய சுவடுகள் சித்தர் நூல்களையும் கற்றறிந்தார் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று திருப்பள்ளி எழுச்சி மற்றும் அர்த்தசாம பூஜையும் தவறாத கலந்து கொள்ளும் பழக்கம் கொண்டார். பெற்றோர் உறவுக்கார பெண்ணான மீனாட்சி அம்மாளை மணம் முடித்து வைத்தனர் இல்லற வாழ்வின் இரு குழந்தைகள் பெற்றார். பல்வேறு தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் நாட்டம் கொண்டார் இறையடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் மற்றும் பல உதவிகளை செய்து வந்தார் மாயாண்டி சுவாமிகள் செல்லப்ப சுவாமிகளை குருவாக பெற்றார் அவரிடம் உபதேசங்கள் பெற்றார். மாயாண்டி சுவாமிகள் துறவு கொள்ளும் காலம் வந்தது. செல்லப்ப சுவாமிகள் வேண்டுகோளின் படி அவருடன் தங்கினார் செல்லப்பா சாமிகள் உத்தரகோசமங்கை அருகே ஜீவ சமாதி அடைந்த பின் அவர் சமாதியில் திருப்பணிகளை மேற்கொண்டார் பின் மதுரை வந்து திருப்பரங்குன்றம் முருகன் அருளால் திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள திரிகூட மலையில் தெய்வீக பணி செய்ய நிர்மாணிக்கப்பட்டார் இம்மலையின் சிறப்பு என்னவென்றால்
காகபுஜண்டர் மச்சமுனி சித்தருக்கு உபதேசம் செய்த மலையாகும் இங்கு மாயாண்டி சுவாமிகள் வந்ததும் அவருக்கு சீடனாக மதுரையைச் சேர்ந்த இருளப்ப கோனார் என்பவர் சீடானானார் சுவாமிகளின் விருப்பத்திற்கு இணங்க ஆன்மீக பணிகள் செய்தார் பழனியில் இருந்து கொண்டு வந்த தண்டயுதபாணி விக்ரகம் திரிகூடல் மலை உச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது மலை முழுவதும் பல கோயில்கள் அமைக்கப்பட்ட திருப்பணிகள் செய்யப்பட்டது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் பள்ளிகொண்ட பெருமாள் ஆலயம் சீனிவாச பெருமாள் ஆலயம் ஆஞ்சநேயர் ஆலயம் அதோடு சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி வேலம்மாள் என்றால் பெண் சித்தர் ஜீவ சமாதியின் அமைந்துள்ளது அடிவாரத்தில் ராமலிங்க விலாசம் அமையப்பெற்று திருப்பணி செய்யப்பட்டது ராமலிங்க சுவாமிகள் என்ற சித்தர் செல்லப்ப சாமிகளின் குரு ஆவார்.
மதுரையில் விளாச்சேரி கோரிப்பாளையம் ஆரப்பாளையம் வண்டியூர் திருபுவனம் திருப்பாச்சேத்தி வெள்ளை குறிச்சி
வாகுடி கீழராங்கியம் போன்ற இன்னும் பல இடங்களில் சுவாமிகளின் பெயரால் மடங்கள் அமைய பெற்று ஆன்மீகம் மற்றும் அன்னதான அறப்பணிகள் மிகவும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தான் சமாதி அடையும் நாளை இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவித்தார். 1930 புரட்டாசி மாதம் தன்னுடைய நேரம் வந்ததும் இருளப்ப கோனாரின் இடது தோளில் சாய்ந்து சட்டையை கழட்டும் நேரம் வந்துவிட்டது என்று கூறி சமாதி நிலை அடைந்தார் அவருடைய ஜீவ சமாதியின் மேல் அவர் விருப்பப்படி அவர் வழிபட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது வருடா வருடம் குரு பூஜையும் நடைபெறுகிறது பசிப்பிணையை போக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அறப்பணிகளை செய்து வந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பசிப்பிணையோடு உடற்பிணையையும் நோக்கி பல மகிமைகள் செய்தார் என்றும் அவருடைய ஜீவ சமாதியில் பல அற்புதங்களை நிகழ்த்தி அரூபமாய் நின்று பக்தர்களுக்கு நல்லாசி வழங்குகிறார்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா

கருத்துகள்
கருத்துரையிடுக