8 பட்டியல் இனத்தவர்களை தன் அமைச்சர் அவையில் இடம்பெற செய்து சமத்துவம் சமூக நீதி ஆட்சி என பாறைச்சாற்றிய முதலமைச்சர். மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் பாராட்டு!!

தமிழகத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பொது தேர்தலில்  தனி பெரும் கட்சியாக வெற்றிபெற்று திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த  காங்கிரஸ் , இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளி கட்சிகளின்.  துணையுடன் ஆட்சி அமைத்தது இந்நிலையில்  முதலமைச்சர் அவர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குபெற வேண்டும் என்று  ஆதரவு அளித்த கட்சிகளுக்கு கோரிக்கை வைத்த நிலையில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருவர் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலா ஒரு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர் மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து ஆட்சி நடைபெற்று வருகிறது 

ஏற்கனவே முதலமைச்சர் மற்றும் ஒன்பது அமைச்சர்கள் பதவேற்ற தொடர்ந்துமேலும்  அமைச்சரவை விரிவாக்கம் செய்த நிலையில் சமத்துவம் நிறைந்த சமூக நீதி அரசு என்பதற்கு நான்கு பெண் அமைச்சர்கள்  இடப்பெற்றுள்ளதும் த.வெ.க கட்சியில் இருந்து  பட்டியியலனத்தவர்களான மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் , வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு தென்னரசு அவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு  காந்திராஜன் அவர்கள், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மாண்புமிகு லோகேஷ் தனபால் அவர்கள் , கால்நடைத்துறை அமைச்சர் மாண்புமிகு கமலி அவர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மாண்டுமிகு மதன் ராஜா அவர்கள், என 6 பேரும் , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் மாண்புமிகு விஸ்வநாதன் அவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சராகவும்  விடுதலை சிறுத்தைகள கடசியை  சேர்ந்த மாண்புமிகு வன்னி அரசு அவர்கள் சமூகநீதி நலத்துறை அமைச்சர் என 8 பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி சமத்துவத்தை நிலை நாட்டியுள்ளார் மேலும் ஏற்கனவே மாணவ மாணவிகள் விடுதிகளை சமூகநீதி விடுதிகளாக மாற்றம் செயப்பட்ட நிலையில் மொத்தமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை சமூகநீதி நலத்துறை என பெயர் மாற்றம் செய்திருப்பது இந்த ஆட்சி சமூக நீதி ஆட்சியின் தொடக்கமாக கருதுகிறோம்  பெரிதும் வரவேற்கிறோம், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கள்ளர் சீர்மரிபினர் நலத்துறை  பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கொண்டுவர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில்  வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

சா.அருணன்

நிறுவனத் தலைவர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.

சென்னை செய்தியாளர் சந்தியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!