87 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்..!மொத்தமாக வாங்கி சுற்றுவட்டார பகுதிகளுக்கு சப்ளை செய்த நபர் சிக்கினார்!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி உட்கோட்டம் இராமநத்தம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தொழுதூர் – தச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் பாலாஜி ஏஜென்சிஸ் சாக்லேட் மற்றும் மிச்சர் கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இராமநத்தம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (38) என்பவர் கொரியர் மூலம் ஹான்ஸ் பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி சுற்றுவட்டார பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் மேற்கொண்ட ஆய்வில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 87 கிலோ மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவை இராமநத்தம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொழுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக