எனதிரிமங்கலம் தூய பாத்திமா அன்னை ஆலய 76 ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 76 ஆம் ஆண்டுப் பெருவிழா கடந்த மே 16-ம் தேதி    கொடியேற்றத்துடன்  தொடங்கியது. 

இதை தொடர்ந்து தினமும் ஜெபமாலை திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது. 

விழாவிற்கு பங்குத்தந்தை லூர்துசாமி, உதவி பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினர்.

இதில் தூய பாத்திமா அன்னைக்கு பக்தர்கள் மெழுகுவர்த்தி, பூ மாலை அளித்தனர். பாத்திமா அன்னையின் தேர் சென்ற வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

 அலங்கரிக்கப்பட்ட பாத்திமா அன்னையின் அலங்காரத் தேர் பவனி கிராமத்தின் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் சிஎஸ்எஸ்டி அருட்சகோதரிகள், வேதியர், கொத்து தலைவர்கள், எனதிரிமங்கலம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!