அரக்கோணம் திட்ட பணிகளுக்கு ரு .72 கோடி நிதி தந்த மோடிக்கு பாஜக தலைவர் நன்றி கடிதம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் திட்ட பணிகளுக்காக ரு. 72 கோடி நிதி தந்த பிரதமர் மோடிக்கு இராணிப்பேட்டை மாவட்டம் பாஜக அறிவு சார் பிரிவு, மாவட்ட தலைவர், அட்சய ஆனந்த் அனுப்பிய கடிதத்தில் மோடிக்குநன்றி தெரிவித்து உள்ளார் இது குறித்து அனுப்பிய நன்றி கடிதத்தில் அவர் கூறியதாவது
தமிழகத்துக்கு பல்வேறு திட்ட பணிகள் மூலம் பல கோடி நிதி கொடுத்து வரும் வேலையில் அரக்கோணம்
இரயில் நிலைய புனரமைப்பு பணிகளுக்காக ரூ 52 கோடி நிதியும் | அரக்கோணம் டவுன் அரசு மருத்துவமனை நவீன கட்டிட வசதிகளுக்கு ரு20 கோடி என நிதிதந்த மத்திய அரசுக்கும் பாரத பிரதமர் மோடிக்கும்
அரக்கோணம் பொது மக்கள் மற்றும் பாஜக கட்சியினர் சார்பில் கோடான கோடி நன்றி தெரிவிக்க கடமைபட்டு உள்ளேன் இவ்வாறு கடிதத்தில் கூறிவுள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக