தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் அந்தோணி ராஜ் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
தென்காசி அருகே சிவகிரியில் பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரில் அந்தோணி ராஜை அழைத்து விசாரிக்கும்போது போலீசார் மரியாதை குறைவாக நடத்தியதாகவும், கன்னத்தில் அறைந்ததாகவும் குற்றச்சாட்டு.
மீண்டும் மே 21ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது விஷமருந்திவிட்டு அவர் காவல் நிலையம் சென்றதாகத் தகவல். காவல் நிலையத்தில் மயங்கிய அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக