திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட ரூ.63 லட்சம் நிதி… புதிய ஆட்சியில் ஏன் முடக்கம்? ₹63 லட்சம் திட்டம் பாதியில் நிறுத்தம் — யார் அழுத்தம்?
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கக்கலையன் குட்டையை ஆக்கிரமிப்புகள் அகற்றி கரை சீரமைத்து நடைமேடை ஆகிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கியது. எனினும், இந்த நிதி தற்போது வரை முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.
கக்கலையன் குட்டை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் அந்தக் குட்டையை கழிவுநீர் மற்றும் குப்பைகளை கோழி இறைச்சி கொட்டி வருகின்றன இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது நோய் பரப்பு அபாயமும் இருந்து வந்தது அதன் அடிப்படையிலேயே மேற்படி இந்த காக்களையின் குட்டையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. நல்ல நோக்கில் ஒதுக்கப்பட்ட இந்த நிதி முழுமையாக சீரமைப்பு செய்யாமல் இருப்பது மக்கள் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்சிகள் மாறலாம் ஆனால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என ஆக்கிரமிப்பு ஏன் இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை என்றும் ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பந்ததாரர் நகராட்சி நிர்வாகத்திற்கு கமிஷன் தந்து முழுமையாக லவட்டி கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்நிதி செலவிடப்படாமால் அரசின் திட்டங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் காத்திருப்பு.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக