தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரமைத்து, சமூக நீதியை நிலை நாட்டி, மக்களின் ஆட்சியாக இனி வரும் 5 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி நடைபெற வேண்டும், தமிழக வெற்றி கழகத்திற்க்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!
கோவை பந்தயசாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அமைந்துள்ளது. இதன் கோவை மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது..
தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் நிறைவு பெற்று, தமிழக வெற்றி கழகம் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு தமிழக மக்கள் மாபெரும் ஆதரவை தந்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை கூறுவதாக கூறியவர்..
தமிழத்தில் புதிய கட்சி உதயமாகி உள்ளது இந்த கட்சி அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும், வெற்றி பெற்ற பின்னர் இதனை மறந்து விட கூடாது என தெரிவித்தார். இந்த தேர்தலில் பணநாயகம் முற்றிலும் ஒழிக்க பட்டு, ஜனநாயகம் வென்றுள்ளது. 1.72 லட்சம் பேர் பணத்துக்கு விலை போகாமல் வாக்குகளை செலுத்தி உள்ளனர் இது வரவேற்கத்தக்கது. என்று தெரிவித்தார். மேலும் பணத்தை வழங்கி அதிகாரத்தை பெறலாம் என்ற எண்ணங்களுக்கு மக்கள் தீ வைத்து கொளுத்தி உள்ளனர். மக்கள் காமராஜரை போல, கக்கனை போல, நல்ல ஆட்சியை வழங்க வேண்டும், சட்ட ஒழுங்கு பாது காக்க பட வேண்டும், சமூக நீதி நிலை நாற்றபட வேண்டும், நீர் நிலைகளை காக்க வேண்டும், தொழிலாளர் நலன் காக்க பட வேண்டும், தொழில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், விவசாய நிலங்கள் பெருக வேண்டும், இதற்க்கு நீர் நிலைகளை காக்க வேண்டும், தமிழகத்தில் காவல்துறை, நீதித்துறை, மருத்துவம், விஞ்ஞானம், அரசின் கடமை அனைத்திலும், ஜாதி மத வேறுபாடுகள் இன்றி நல்ல அரசாக செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார். கூட்டணியும் நல்ல கூட்டணியாக அமைந்து ஊழல் இல்லாத தமிழகம் அமைய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சீர் பட வேண்டும் இத்தகைய செயல்களை தமிழக வெற்றி கழகம், நல்ல அரசை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக