5.லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட கெங்கை அம்மன் சிரசு திருவிழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு திருவிழா மாவட்டத்தின் மிக முக்கிய திருவிழாவாகும் இதனிடையே நேற்று கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் தமிழகம் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
இதனிடையே குடியாத்தம் நகராட்சி சார்பாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோபலபுரம் கெங்கையம்மன் ஆலயம், தரணம் பேட்டை சுண்ணாம்புபேட்டை மற்றும் பழைய புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை வேன் மற்றும் லாரிகள் மூலம் அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது சுமார் 80 டன் குப்பை அகற்றப்பட்டு வருவதாக குடியாத்தம் நகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக