உசிலம்பட்டியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ பொங்கல் திருவிழாவில்- 500-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர்!!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் 3 நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று துவங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லும் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்றது.
இதில் முளைப்பாரி ஊர்வலமானது உசிலம்பட்டி மேலப்புதூரில் தொடங்கி தேனி சாலை, மதுரை சாலை, நாடார் புதுதெரு, வண்ணாரப்பேட்டை தெரு, விநாயகர் கோவில் தெரு, தேவர்சிலை உள்ளிட்ட உசிலம்பட்டியின் முக்கிய பகுதிகளில் வழியாக அம்மன் காமதேனு வாகனத்தில் காட்சியளித்து முன்னே செல்ல சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாரு ஊர்வலமாக கோயிலுக்கு சென்றடைந்து நேர்த்திகடன் செலுத்தி பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.
மேலும் கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக