உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் ரீல்ஸ்' எடுப்பதற்காக தண்ணீர் தொட்டியில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள்!!
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் சமூக வலைதளங்களுக்காக வீடியோ எடுக்கச் சென்ற சிறுவர்கள், உயரமான தண்ணீர் தொட்டியில் சிக்கிக்கொண்ட சம்பவம்
சுமார் 16 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மதியம் 5 சிறுவர்கள் 'ரீல்ஸ்' எடுப்பதற்காக ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பழைய ஏணி இடிந்து விழுந்தது. இதில் கீழே விழுந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தனர்.
ஆனால், மேலே இருந்த இரண்டு சிறுவர்கள் கீழே இறங்க வழி தெரியாமல் திகைத்தனர். ஏணி முற்றிலும் உடைந்ததால் சுமார் 100 அடி உயரத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக