குடியாத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக குடியாத்தம் தாலுகா போலீசர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடியாத்தம் அடுத்த சின்னதோட்டாலம் பகுதியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி மகன் சுகுமார் 28 , கூட நகரம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் லோகேஷ் 25 , கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கலையரசன் 24 ஆகிய 3 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சா. மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக