மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், 33வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கோவை மதிமுக கட்சி அலுவலகத்தில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!
கோவை மாவட்டம்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் துவங்கபட்டு, 33 ஆம் ஆண்டுகள் கடந்துள்ளது. இதன் தொடக்க விழாவை முன்னிட்டு
கோவை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாவட்ட, கழக தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு தலைமை தாங்கினார். மதிமுக கழக கொடியினை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் அ.சேதுபதி ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள
பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாநில சட்டதுறை செயலாளர் சூரி.நந்த கோபால் மாலை அணிவித்தார்.
மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் சுஜிதா தர்மராஜ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு கூறியதாவது..
மதிமுக கட்சி துவங்கி 33 ஆண்டுகள் கடந்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல கட்சியாக உருவாகி உள்ளது. இதற்க்கு காரணம் மதிமுக பொதுசெயலாளர் வைகோ தான், அவரது அயராது உழைப்பின் வெளிப்பாடாக தமிழகத்தில், மதிமுக கட்சி நிலைத்து ஜெயித்திருப்பதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் பயனீர் தியாகு, சு.தூயமணி, சித்ரா தங்கவேலு, பகுதி கழக செயலாளர்கள் எஸ்.பி.வெள்ளியங்கிரி, அன்பு என்கிற தர்மராஜ், எல்.லூயிஸ், கே.பழனிச்சாமி, விஸ்வராஜ், குனிசை லாரன்ஸ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
கு.விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம்.செல்வம், ராமச்சந்திரன், வி.கே.எம்.ஷாஜகான், பாலசுப்பிரமணியம் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக