மதுரை - நத்தம் மேம்பாலத்தில் டூவீலர்கள் மோதி நத்தத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் பலி!!


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரன் மகன் விஸ்வா (21), அதே ஊர் முஸ்லிம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முகம்மது ஹனிபா மகன் சல்மான்கான் (21) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் (20). இவர்கள் மூவரும் ஒரே டூவீலரில் மதுரை சித்திரை திருவிழாவைக் காண மதுரை - நத்தம் மேம்பாலத்தில் மூவரும் வந்தபோது, எதிர் திசையில் மற்றொரு டூவீலரில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த தங்கத்துரை மகன் மாதேஷ் (26) என்பவர் சென்றுள்ளார். திருப்பாலை பகுதியில் மேம்பாலத்தில் ஒன்வேயில் இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஸ்வா, சல்மான்கான், மாதேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; விக்னேஷ் படுகாயம் அடைந்தார். மேற்படி சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!