குடியாத்தத்தில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர்கள் .3. பேர் கைது 8 செல்போன்கள் பறிமுதல்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளர் ராணி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போனகளை வைத்து நடமாடிக் கொண்டிருந்தார் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் . சென்று விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் சென்னை கேளம்பாக்கம் .படுர்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜய் வயது 28 என்றும் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவருடன் வந்த சென்னை கேளம்பாக்கம் படுர் பகுதி சேர்ந்த செந்தில் மகன் பிரதீப் குமார் 24 விஸ்வநாதன் மகன் பிரிவின் வயது 27 ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 8 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக