+2 தேர்வில் மாணவிகள் அதிக அளவில் சாதனை!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!எப்போதும் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிவாரியாக பார்க்கும்போது அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.16 சதவீதமாகவும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.72 சதவீதமாகவும் உள்ளது.தேர்ச்சி பட்டியலில் ஈரோடு மாவட்டம் முதலிடம்
மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அரசு பள்ளிகளின் செயல்திறனில் கூட ஈரோடு மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை இரண்டாம் இடத்தையும், திருச்சி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்த 5 மாவட்டங்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியில் 98.87%
பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம்.
சிவகங்கை 98.05%,
கன்னியாகுமரி 97.63%,
நெல்லை 97.54%
திருச்சி 97 சதவீதம்
மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக