சவாரி எடுப்பதில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்: 2பேர் மீது வழக்குப் பதிவு!!


குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே புறையூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சிந்தா சுலைமான் (37) மற்றும் சேதுக்குவாய்த்தான் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் அரவிந்த் (28) ஆகிய இருவரும் குரும்பூரில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு நிறுத்தங்களிலிருந்து ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

சிந்தா சுலைமான் ஏரல் சாலை சந்திப்பு பகுதியில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ரமேஷ் அரவிந்த், "இந்த இடத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது" எனக் கூறித் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது.

இந்தத் தாக்குதலில் சிந்தா சுலைமான் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில், குரும்பூர் போலீசார் சிந்தா சுலைமான் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!