இலுப்பூர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் சாதனை!!

புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் மேட்டுசாலையில் உள்ள மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி + 2 அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தது.

மாணவி M. பர்கானா மரியம் 586 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார் R. நபிலா பானு 569 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் , D. சாரா 554 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்தார்கள். மேலும் பாட வாரியான சாதனையில் பர்கானா மரியம் மற்றும் சாரா ஆகியோர் கணக்குப்பதிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். கணினி பயன்பாட்டிலும் பர்கானா மரியம் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். S. தன்ஷிலா பானு மற்றும் F. ஜமிமா பேகம் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றனர்.

சாதனை புரிந்த மாணவிகளுக்கு பள்ளி நிறுவனர் முனைவர் இரா. சின்னதம்பி தாளாளர் R.C. உதயகுமார் ஆகியோர் பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் திருமா. பூங்குன்றன், பதிவாளர் மு. தினேஷ்குமார், பள்ளி முதல்வர் ராஜ கயல்விழி, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் +2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி மற்றும் சிறப்பான மதிப்பெண்கள் எடுக்க உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி முதல்வரையும் நிர்வாகம் பாராட்டியது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!